நாமக்கல்லில் கொள்ளையடிக்க வந்து ஏடிஎம்-ல் சிக்கிக்கொண்ட வடமாநில இளைஞர்.. (வீடியோ)

Youtube Video

தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக பணம் எடுப்பது போல் பாவனை செய்தவாறு இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார்.

 • Share this:
  நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர், ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

  மோகனூர் அடுத்த அணியாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக பணம் எடுப்பது போல் பாவனை செய்தவாறு இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார்.

  இதனை கண்ட பொதுமக்கள் அவரை ஏடிஎம் மையத்திற்குள் வைத்து அடைத்துள்ளனர்.  பின்னர், ரோந்து பணியில் இருந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை பிடித்தனர்.

  விசாரணையில், அவர் தனியார் கோழிப்பண்ணையில் பணிபுரியும் பீகார் மாநிலத்தை சேர்ந்த உபேந்திர ராய் என்பது தெரியவந்தது.

  பணம் எடுப்பது போல் அடிக்கடி ஏடிஎம் இயந்திரத்தை நோட்டமிட்ட உபேந்திர ராய், நேற்று மாலை ஆள் இல்லாத நேரத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

  இதனால், உபேந்திர ராயை கைது செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   
  Published by:Yuvaraj V
  First published: