சர்வதேச பீச் ஜூனியர் வாலிபால் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக மாணவி
சர்வதேச பீச் ஜூனியர் வாலிபால் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக மாணவி
இந்திய மாணவி
Indian student : மே மாதம் 13ம் தேதி பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச பள்ளி மாணவர்களுக்கு இடையேயான பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட தேர்வாகியுள்ளார்.
பிரான்சில் நடைபெற உள்ள சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணி சார்பில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவி அமிர்தா வருகிற மே மாதம் 13ம் தேதி பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச பள்ளி மாணவர்களுக்கு இடையேயான பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட தேர்வாகியுள்ளார்.
அவரை பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், நாமக்கல் கைப்பந்து கழக செயலாளர் சதாசிவம் பரமத்திவேலூர், எம்எல்ஏ சேகர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
செய்தியாளர் : ரவிச்சந்திரன் ராஜகோபால்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.