Home /News /tamil-nadu /

திமுக வேட்பாளரை வென்ற சுயேட்சை வேட்பாளர்... குமாரபாளையம் நகர்மன்ற தலைவராக தேர்வு

திமுக வேட்பாளரை வென்ற சுயேட்சை வேட்பாளர்... குமாரபாளையம் நகர்மன்ற தலைவராக தேர்வு

குமாரபாளையம் நகராட்சி மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு திமுக 14 இடங்களையும் அதிமுக 10 இடங்களையும் பிடித்தது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    குமாரபாளையம் நகராட்சி மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு திமுக 14 இடங்களையும் அதிமுக 10 இடங்களையும் பிடித்தது. திமுக அதிமுக அல்லாமல், சுயேட்சை வேட்பாளர்கள் 9 இடங்களில் வெற்றி பெற்றனர். இங்கு தலைவர், துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற 17 பேரின் ஆதரவு தேவை.

    திமுக அதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நகர்மன்றத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. திமுக சார்பில் சத்திய சீலன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சுயேச்சையாக வெற்றி பெற்ற விஜய் கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தனர். இருவரின் மனுக்கள் ஏற்கப்பட்டு நகரமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

    இதையும் படிங்க - திமுக உறுப்பினர்கள் 'ராஜினாமா' செய்ய வேண்டும் - திருமாவளவன் ட்வீட்

    வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சை வேட்பாளரான விஜய் கண்ணன் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலை முன்னிட்டு குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க - தேனியில் அதிமுக, திமுக ஆதரவுடன் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை கைப்பற்றியது அமமுக

    அதிமுக, திமுக தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சுயேச்சை வேட்பாளர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    Published by:Musthak
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி