• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொறியியல் தரவரிசை பட்டியலில் 4-ம் இடம் பிடித்து அரசு பள்ளி மாணவர் சாதனை

பொறியியல் தரவரிசை பட்டியலில் 4-ம் இடம் பிடித்து அரசு பள்ளி மாணவர் சாதனை

பொறியியல் தரவரிசை பட்டியலில் 4-ம் இடம் பிடித்து அரசு பள்ளி மாணவர் சாதனை

பொறியியல் தரவரிசை பட்டியலில் 4-ம் இடம் பிடித்து அரசு பள்ளி மாணவர் சாதனை

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் 4வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

  • Share this:
    ராசிபுரம் அடுத்த வெண்ணாந்தூரை சேர்ந்த செந்தில்குமார்- ஜமுனா தம்பதியின் மகன் தீபகுமார், அங்கு உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று வந்தார். இவர் 2020 மற்றும் 21ம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 582 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்தநிலையில் அவர் பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தார். அதன்படி அண்மையில் வெளியிடப்பட்ட பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான அரசு பள்ளி மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் மாணவ தீபகுமார் 196 புள்ளி 2 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதே பள்ளியை சேர்ந்த கணிதரன் என்ற மாணவரும் மாநில அளவில் 14வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    மாணவர் தீபகுமார் மாநில அளவில் 4வது இடத்தை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட வெண்ணந்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார், மாணவரை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் வெண்ணாந்தூர் அரசு பள்ளியில் தனி நூலகம் அமைக்கப்பட்டு மாணர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அதனாலேயே தங்களது பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பு சேர்க்கையில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்குமார்.

    Also Read : அடுத்த 2 மணிநேரத்துக்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்

    மாநில அளவில் தனது மகன் 4வது இடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தன்னுடைய மகனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறுகிறார் தீபகுமாரின் தந்தை செந்தில்குமார்.

    கணினி பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என மாணவர் தீபகுமார் விருப்பம் தெரிவித்துள்ளார். மாணவரின் சாதனை மென்மேலும் தொடர அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: