திருச்செங்கோடு அருகே காதலன் ஏமாற்றியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதலி...

Youtube Video

திருச்செங்கோடு அருகே காதலித்தவன் ஏமாற்றி விட்டு வேறு திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்து பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

  • Share this:
    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், பொய்யேரி பகுதியில் வசித்து வருபவர்கள் சுந்தரராஜன்- விஜயா தம்பதி. இவர்களுக்கு தீபா என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர். 23 வயதான தீபா B.TEC படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை செய்து வந்தார். மகன் பிரவீன் திருச்செங்கோடு தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பிஇ படித்து விட்டு பள்ளி பாளையத்தில் உள்ள காகித ஆலையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரும், தீபாவும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன், தீபாவை திருமணம் செய்த கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உறவு வைத்துள்ளார். சென்னைக்கு வரும் மணிகண்டன் பலமுறை தீபாவை அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார்.

    மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று நம்பியிருந்த நிலையில், திடீரென வேறு ஒரு பெண்ணுடன் பழகத் தொடங்கியதை அறிந்து தீபா அதிர்ச்சியடைந்தார். இதனால் மனம் உடைந்த தீபா சில நாட்களுக்கு முன் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர், போராடி அவரது உயிரைக் காப்பாற்றினர்.

    இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி மணிகண்டன் வேறொரு பெண்ணை வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த தீபா தனது மரணத்திற்கு காரணம் மணிகண்டன்தான் என கடிதம் எழுதி வைத்து விட்டு புதன்கிழமை மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.



    தூக்கில் தொங்குவதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே தீபா இறந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் தீபாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது மகளை ஏமாற்றி ஆசை வார்தை கூறி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கிய மணிகண்டனை கைது செய்யும் வரை தீபாவின் உடலை வாங்க மாட்டோம் என கூறி தீபாவின் பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் படிக்க... 20 நாட்களாய் புதுச்சேரி-கடலூர் சாலையில் வழிப்பறி செய்து வந்த பைக் கொள்ளை கும்பல் கைது.. காட்டி கொடுத்த சிசிடிவி வீடியோ..

    இதையடுத்து, மணிகண்டனை மொளசி காவல் நிலைய ஆய்வாளர் சகாயராஜ் கைது செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. காதலித்தவன் ஏமாற்றியதால் மனமுடைந்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    -----------------------------------------------------------------------------------------------

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Vaijayanthi S
    First published: