Home /News /tamil-nadu /

நாமக்கலில் பேய் விரட்டுவதாக கூறி பெண்களை சாட்டையால் கொடூரமாகத் தாக்கிய போலி சாமியார் கைது...

நாமக்கலில் பேய் விரட்டுவதாக கூறி பெண்களை சாட்டையால் கொடூரமாகத் தாக்கிய போலி சாமியார் கைது...

Youtube Video

நாமக்கல் அருகே பேய் விரட்டுவதாக கூறி பெண்களை சாட்டையால் கொடூரமாகத் தாக்கிய போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபில் வீடியோ வெளியிடுவதில் ஏற்பட்ட பிரச்னை தான் கைதுக்கு காரணமா? அல்லது மனித உரிமை மீறல் காரணமா?

  நாமக்கல் மாவட்டம், மஞ்சநாயக்கனூர் என்ற இடத்தில் மலை கரட்டில் கருப்பணார் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் காதப்பள்ளியைச் சேர்ந்த 50 வயதான அனில்குமார் என்பவர் கருப்பணார் சுவாமி கோயிலுக்கு வந்தார். கோயிலை புதுப்பித்து தனியாக மடம் போல் அமைத்து, கூடுதலாக சில நிலங்களை ஆக்கிரமித்து பத்திரம் பதிவு செய்து கொண்டார்.

  கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்த அவர், வாரம் இருமுறை விஷேச நாட்களில் பூஜை செய்து கிடா வெட்டி வழிபாடு நடத்தி வந்தார். குழந்தை வரம்வேண்டியும், தாலி பாக்கியம் நிலைக்கவும் இந்தக் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பெண்கள் சாமியார் நடத்திய பூஜையிலும் பங்கேற்றனர்.

  நாட்கள் செல்ல செல்ல, சாமியாரின் பூஜையில் உள்ளூர் பெண்கள் மட்டுமின்றி நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் பங்கேற்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்வது, பில்லி, சூனியம் போன்றவற்றை எடுப்பது, பேய் விரட்டுவது போன்றவற்றை சாமியார் அனில்குமார் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

  பெண்கள் கூட்டம் மேலும் வருவதற்காக இவற்றை வீடியோ எடுத்து யூ ட்யூப்பில் வெளியிட சாமியார் முடிவு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரும் சாமியார் பேய் விரட்டும் வீடியோவை பதிவு செய்து யூ ட்யூப்பில் வெளியிடுவதற்கு பதிலாக, முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் குரூப்களில் பதிவிட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் சாமியார் மதுபோதையில் பெண்களை சாட்டையால் அடிப்பதும், தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைவதும், கால்களால் எட்டி உதைப்பதும் பதிவாகிருந்தது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவியது. சம்பந்தப்பட்ட சாமியார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

  இந்த நிலையில் காதப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர், வேலகவுண்டம்பட்டி போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் போலி சாமியார் அனில்குமார் மீது பெண்களை வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  விசாரணைக்கு பிறகு, சாமியாரை கைது செய்த போலீசார் அவரை பற்றி விசாரித்தனர். அதில் அவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்து மும்பையில் வசித்து வந்தனர். அப்போது பிறந்த அவருக்கு அனில்குமார் என பெயர் வைத்தது தெரியவந்தது..

  5 ஆம் வகுப்பு படித்துள்ள அனில்குமாருக்கு இரண்டு மனைவிகள். எப்போதும் சாமி குறிசொல்லுவதாக உச்சகட்டமாக ஆவேசப்பட்டுக்கொண்டே இருந்ததால், இரு மனைவிகளும் அவரை விட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் சுற்றிவிட்டு, மீண்டும் தமிழகத்திற்கே வந்து சேர்ந்த அனில்குமார் சாமியாராக மாறி வசூல் வேட்டையை ஆரம்பித்தார்.

  மேலும் படிக்க... ஏமாற்றிய காதலன் மனமுடைந்த காதலி தற்கொலை...

  பல ஆண்டுகளாக கிடா வெட்டி, அமைதியாக அருள்வாக்கு சொல்லி வந்த அனில்குமார், பெண்களை தாக்கி வெளியிட்ட வீடியோ அவரது கைதுக்கு காரணமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சாமியார் அனில்குமாரை, விசாரணைக்கு பின் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.  சாமியார் கொடூரமாக தாக்குவார் என தெரிந்தும் அவரிடம் பெண்கள் சென்றது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இது போன்ற கொடூரமான இடங்களுக்குச் செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் ஏற்படவேண்டும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Namakkal

  அடுத்த செய்தி