ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு மருத்துவமனை டாஸ்மாக் பாராக மாறிய அவலம்.. குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்

அரசு மருத்துவமனை டாஸ்மாக் பாராக மாறிய அவலம்.. குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்

இராசிபுரம் அரசு மருத்துவமனை

இராசிபுரம் அரசு மருத்துவமனை

குடிமகன்களின் கூத்தடிக்கும் இடமாக மாறி வரும் ராசிபுரம் அரசு மருத்துவமனை குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இராசிபுரம் அரசு மருத்துவமனை டாஸ்மாக் பாராக மாறிய அவலம் குழந்தைகள் வார்டில் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்களால்  பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ராசிபுரத்தை  சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த மருத்துவமனையை நம்பியே உள்ளன. தொடர்ந்து இந்த மருத்துவமனையின்  மீதும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் செவிலியர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.குறிப்பாக இந்த மருத்துவமனையின் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வராத நாளே இல்லை என கூறப்படுகிறது.

Also Read: நாய் மீது துப்பாக்கிச் சூடு.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பல்வேறு வசதிகள், மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் அப்படியே பத்திரமாக ஒவ்வொரு அறையிலும் பூட்டி வைத்திருப்பது, முறையான சிகிச்சை அளிக்காமல் விபத்து, பாம்பு கடி, நெஞ்சு வலி போன்ற வருபவர்களுக்கு முதலுதவி கூட செய்யாமல் சேலம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்புவது. சுகாதாரமின்மை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் புழு பூச்சிகள், குடிநீர் பற்றாக்குறை, கழிப்பிடம் தூய்மையின்மை, துர்நாற்றம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு மற்றும் ஆண்கள் பிரிவில் உள்ள கழிப்பிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை குடிமகன்கள் குடித்துவிட்டு வைத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த மது பாட்டில்கள் அங்கு பணியில் உள்ள ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், இரவு நேரங்களில் குடித்துவிட்டு போட்டுவிட்டு சென்றனரா? அல்லது நோயாளிகளை பார்க்க வருபவர்கள் குடித்துவிட்டு போட்டனரா? என சந்தேகம் எழுந்துள்ளது.

Also Read: வீட்டில் சடலமாக கிடந்த மகள்.. காப்புக்காட்டில் தந்தை மர்ம மரணம் - திருவண்ணாமலையில் அதிர்ச்சி

மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம்  தலையிட்டு  தவறு செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நிலவி வரும் குற்றச்சாட்டுக்களை கண்டறிந்து நோயாளிகளின் நலன் கருதி நிவர்த்தி செய்ய வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 செய்தியாளர் : சுரேஷ் (நாமக்கல்)

First published:

Tags: Govt hospital, Namakkal, Rasipuram