சமையல் செய்ய வந்த பெண்ணால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - கூலிப்படைக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் காவல்துறை

கொலை செய்யப்பட்ட பெண்

இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 • Share this:
  நாமக்கல்லில் மூதாட்டி ஒருவர் நகைக்காக  கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  நாமக்கல் நகரப் பகுதியில் உள்ளது சுப்ரமணியபுரம். இப்பகுதியில் 50 வயதான ஜானகி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார் இவருடைய மகன் சென்னையில் பணியாற்றி வருகிறார் அம்மாவிற்கு மாதம்தோறும் பணம் அனுப்பி வைப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜானகிக்கு உதவி செய்ய சமையல் வேலை மற்றும் பணிகளை  செய்ய 35 வயது மதிக்கத்தக்க பெண் பணியில் சேர்ந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் ஜானகி வீட்டில் இறந்து கிடப்பதாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் ஜானகியை தலையணையைக் கொண்டு அமுக்கி கொன்றது தெரியவந்தது அவர் அணிந்திருந்த 2 பவுன் தோடு செயின் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலை செய்த பணிப்பெண் கூலிப்படை உடன் சேர்ந்து ஜானகி கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நகைக்காக மூதாட்டியை சமையல் பணி செய்த பெண் கொலை செய்திருப்பது நாமக்கல் நகராட்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நாமக்கல் செய்தியாளர்: ரவிச்சந்திரன் ராஜகோபால் 
  Published by:Ramprasath H
  First published: