• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Egg Price | முட்டை விலை ஒரே வாரத்தில் கிடுகிடு உயர்வு

Egg Price | முட்டை விலை ஒரே வாரத்தில் கிடுகிடு உயர்வு

முட்டை

முட்டை

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஒரே வாரத்தில் மட்டும் 85 காசுகள் அதிகரித்துள்ளது.

  • Share this:
    நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 85 காசுகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: