முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Egg Price | அதிரடியாக குறைந்தது முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?

Egg Price | அதிரடியாக குறைந்தது முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?

முட்டை

முட்டை

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 35 காசுகள் குறைந்து 4.50 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாமக்கல்லில் முட்டை விலை ஒரேநாளில் 35 பைசா குறைந்து, 4 ரூபாய் 50 பைசாவுக்கு விற்கப்படுகிறது. ஒரே நாளில் 35 பைசா குறைக்கப்பட்டது, இது இந்த ஆண்டில் அதிகபட்சமாக குறைக்கப்பட்ட விலை ஆகும்.

நாமக்கல்லில் இருந்து தினந்தோறும் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் கேரளா ஏற்றுமதிக்கு போக மீதி உள்ள ஒரு கோடி முட்டைகள் மட்டும் உள் மாநிலத்தவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று நாமக்கலில் முட்டை விலை 35 பைசா வரை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் முட்டை போக்குவரத்தில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சில்லறை விற்பனை கடைகளில் கொண்டு செல்ல காலதாமதம், அதாவது இரவு 10 மணிக்கு மேல் கொண்டு செல்ல முடியாமல் காலையில் செல்வதால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. அதனால் மற்ற மண்டலங்களிலும் விலை குறைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 75 பைசா குறையாமல் முட்டை விலை உயர்ந்த நிலையில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு ஒரே நாளில் 35 பைசாவாக அதிரடியாக குறைக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதனை அடுத்து சில்லறை விற்பனை கடைகளில் சென்னை உள்ளிட்ட பல பெரு நகரங்களில் 5 ரூ மற்றும் 6 ரூபாய் வரை முட்டை விலையில் விற்கபடும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் படிக்க... ரூ.3 லட்சம் ரேஸ் பைக்கிற்காக செயின்பறிப்பில் ஈடுப்பட்டவர் கைது..

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Egg, Namakkal