Egg Rate | முட்டை கொள்முதல் விலை ஒரே வாரத்தில் 70 காசுகள் உயர்ந்தது...

Youtube Video

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, 4 ரூபாய் 90 காசுகளாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    முட்டை விலை ரூ 20 பைசா உயர்ந்து ரூ.4.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 1 வாரத்தில் மட்டும் 70 பைசா வரை உயர்ந்துள்ளது. இந்த விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை 4 ரூபாய் 90 பைசா விலைக்கு விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா வரை உயர்ந்து.

    முட்டை விலை உயர காரணங்கள்

    1. மற்ற மண்டலங்களில் விலை உயர்வு கோடைகாலம் என்பதால் முட்டை உற்பத்தி குறைவு.

    2. ஞாயிற்று கிழமைகள் முழு ஊரடங்கு காரணமாக இறைச்சி மீன் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் முட்டைகளை வாங்கி சாப்பிடுவோர்கள் எண்ணிக்கை அதிகம்.

    3. சில்லரை முட்டை விற்பனை அதிகம் என்பதாலும்
    தற்போது ஒரே நாளில் 20 பைசா உயர்ந்துள்ளது.

    4. கடந்த 1 வாரத்தில் 4.20 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து ரூ70 பைசா வரை உயர்ந்து தற்போது 4.90 க்கு விற்பனை செய்ய படுகிறது.

    5. அதேபோன்று கறிக்கோழி உயிருடன் விலை 76 லிருந்து ரூ 6 ரூ குறைந்து 70 ரூ விற்பனை செய்யப்படுகிறது



    6. அதேநேரம் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை 6 ரூபாய் குறைந்து, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டை கோழி கொள்முதல் விலை மூன்று ரூபாய் குறைந்து 62 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: