• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாமக்கல்லில் ‘அதிமுகவின் கோட்டை’யை கைப்பற்றிய திமுக!

நாமக்கல்லில் ‘அதிமுகவின் கோட்டை’யை கைப்பற்றிய திமுக!

திமுக வேட்பாளர் வெற்றி

திமுக வேட்பாளர் வெற்றி

பல முறை திமுக வேட்பாளர்கள் தேர்தல் தோல்விக்கு இந்த ஒன்றியத்தின் வாக்குகளே காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

  • Share this:
    கடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவின் கோட்டையாக இருந்த வெண்ணந்தூர் ஒன்றியம் தற்போது திமுக வசம் வந்துள்ளது.
    பல முறை திமுக வேட்பாளர்கள் தேர்தல் தோல்விக்கு இந்த ஒன்றியத்தின் வாக்குகளே காரணமா இருந்ததாக செல்லப்படும் நிலையில், திமுக வேட்பாளர் ஏ.ஆர்.துரைசாமி, அதிமுக வேட்பாளரை விட 15,809 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 6-வது வார்டுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 9-ல் நடந்தது. இதில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுடன் மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.துரைசாமி 15 ஆயிரத்து 809 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த வார்டில் ஆண் வாக்காளர் 25 ஆயிரத்து 294 பேர், பெண் வாக்காளர்கள் 26 ஆயிரத்து 183 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 51 ஆயிரத்து 471 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

    இதற்கான தேர்தல் வாக்குப்பதிவில் ஆண் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 272 பேர், பெண் வாக்காளர்கள் 22 ஆயிரத்து 192 பேர் என மொத்தம் 43 ஆயிரத்து 464 பேர் வாக்களித்தனர். வாக்கு பதிவு சதவீதம் 84.43 சதம்.
    இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கு வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

    மொத்தம் 12 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது.  இதில்
    திமுக வேட்பாளர் ஏ.ஆர்.துரைசாமி, அதிமுக வேட்பாளர் ம.கண்ணனை விட 15 ஆயிரத்து 809 வாக்குகள் அதிகம் பெற்று  வெற்றி பெற்றார்.

    வாக்குகள் விவரம்:

    ஏ.ஆர்.துரைசாமி  (திமுக) - 28,792
    ம.கண்ணன் (அதிமுக)  - 12983
    எம்.மாரியப்பன் (பாமக)  413
    ஆர்.சாந்தி (தேமுதிக) - 213
    என்.கோபால் (அமமுக) - 67
    ப.சரவணன் (நாம் தமிழர் கட்சி்)- 439
    வ.சிவக்குமார் (சுயே) -6
    தி.ரமேஷ் (சுயே) -24
    ரா.தியாகராஜன் (சுயே) -6,
    ரா.நல்லைய்யன் (சுயே) - 22
    முத்துசாமி (சுயே)- 20,
    ரா.முருகேசன் (சுயே) - 11,
    செல்லாதவை-477
    மொத்த வாக்குகள் - 43473

    திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதனையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஏ.ஆர்.துரைசாமி தேர்தல் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

    தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மா. மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை  உறுப்பினருமான கே.ஆர்.என் ராஜேஸ்குமார், முன்னாள் எம்பி., பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அமைச்சர், மாவட்ட திமுக செயலர் உள்ளிட்ட கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    செய்தியாளர் - சுரேஷ், ராசிபுரம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: