நாமக்கல் : டாஸ்மாக்கை எப்படி தமிழ்நாடு அரசு லாவகமாக இயக்கி வருகிறதோ அதுப்போன்று மணல் குவாரிகளை அரசே எடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் செல்ல ராஜாமணி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் செல்ல ராஜாமணி இன்று நாமக்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 358 நிறுவனங்கள் செயற்கை மணல் (M.Sand) உற்பத்தி செய்ய பொதுப்பணித்துறையிடமிருந்து தரச்சான்றிதழ் (Product Quality Approval Certificate) பெற்றும், பொதுப்பணித் துறையிடமிருந்து அனுமதி பெறாமல் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலி (Fake) செயற்கை மணல் (M.Sand) உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
குவாரிகளில் பெரும்பாலானவை பொதுப்பணித்துறை விதித்துள்ள விதிமுறைகளின்படி செயல்படாமல் முறைகேடாக தரமற்ற ஜல்லிகளை அரைத்து செயற்கை மணல் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிக பணம் பெற்றுக்கொண்டு முறையான அனுமதிச்சீட்டு (Transist Pass) கொடுக்காமல் போலி அனுமதிச்சீட்டு (Fake Transist Pass) கொடுத்து லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பாரம் ஏற்றிவிடப்படுகிகிறது.
அரசுக்கு தினசரி கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதை தவிர்க்க செயயற்கைமணலை அரசு அத்தியாவசியப் பொருளாக அறிவிக்க வேண்டும். அனைத்து செயற்கைமணல் குவாரிகளிலும் அரசே மணலை விற்பனை செய்தது போல் அரசே T.N. M.Sand செயலியில் இணையதளபதிவு (Online) மூலம் முறைகேடுகள் இல்லாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் முற்றிலும் முடங்கிப்போய் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டுமானப்பணிகள் தங்கு தடையின்றி கட்டுமானப்பணிகளுக்கு தேவையான ஆற்று மணல் பயனாளிகளுக்கு குறைந்த விலையில் கிடைத்திட தமிழகம் முழுவதும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.