முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாமக்கல் மாவட்டத்தில் இறப்பு வீதம் குறைந்து வருகிறது: அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டத்தில் இறப்பு வீதம் குறைந்து வருகிறது: அமைச்சர் மதிவேந்தன்

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பு வீதம் குறைந்து கொண்டு வருகிறது,  ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கு அமல்படுத்தும் பணிகள், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் வழங்கும் பணிகள், பால் மற்றும் குடிநீர்  வழங்கும் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்  மாவட்ட ஆட்சித் தலைவர் .கா.மெகராஜ்.மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் நாமக்கல் விருத்தினர் மாளிகையில்  ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் கூடுதல் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் உடனுக்குடன் விநியோகிக்க கட்டுப்பாட்டு மையம், தடுப்பூசி கொள்முதல், கண்காணிக்க இந்திய அரசு பணி அலுவலர்கள் குழு என மின்னல் வேகத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் முழு அனுபவத்தையும், திறனையும் அர்பணிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read More:   அரசு கொடுத்த உதவி தொகையை அரசுக்கே நிவாரணமாக அளித்த மூளை வளர்ச்சி குன்றிய சிறுமி!

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில்  இறப்பு வீதம் குறைந்து கொண்டு வருகிறது மாவட்டத்தில் 2450 படுக்கை வசதி கொண்டதில் 1797 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதம் 653 காலியாக உள்ளதாகவும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் மொத்தம் 768 படுக்கைகளில் 747 படுக்கை நிரம்பி உள்ளதாகவும் 21 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என தெரிவித்தார் .

 ரவிச்சந்திரன் ராஜகோபால் - நாமக்கல் செய்தியாளர்

First published:

Tags: Corona, COVID-19 Second Wave, Minister, Namakkal