Home /News /tamil-nadu /

முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் கலெக்டர் பங்கேற்கவில்லை : காரணம் இதுதான்

முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் கலெக்டர் பங்கேற்கவில்லை : காரணம் இதுதான்

 நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங்

நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங்

நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அவரது குடும்பத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர், விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் முகாம் அலுவலகத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். அவர் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்று வந்தார். அப்போது ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தீவிர சிகிச்சைக்கு பின்பு அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அவரது குடும்பத்தில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். எனவே, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

    இந்த சோதனையில், ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அவரது குடும்பத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதால் லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கொரோனா தொற்று காரணமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் நேற்று கலெக்டர் பங்கேற்காததால், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி ஆட்சியரின் பொறுப்பை கவனித்து வருகிறார்.

    Must Read : விஜயபாஸ்கரின் மாமனார் இல்லத்தில் இருந்து ஆவணங்களை அள்ளிச்சென்ற அதிகாரிகள்

    கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் ஸ்ரேயா சிங் நாமக்கல் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: CoronaVirus, Covid-19

    அடுத்த செய்தி