Home /News /tamil-nadu /

நாமக்கல் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை குறைவு... வியாபாரிகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

நாமக்கல் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை குறைவு... வியாபாரிகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மாடுகள் விற்பனை குறைவு

மாடுகள் விற்பனை குறைவு

Namakkal Puthansanthai : நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் கடந்த காலங்களில் கணிசமான விலையில் விற்கப்பட்ட காளைகள் தற்போது மாடுகள் இல்லாத நிலையில் விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகின்றன. மாடுகளை கிட்டத்தட்ட 70,000 ரூபாயாக  உயர்ந்துள்ளதாகவும் மாடு வாங்க முடியவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது புதன்சந்தை. இங்கு மாடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் கூடும் இடமாக புதன் சந்தை விளங்கி வருகிறது. இங்கு தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் திருப்பூர், திருச்சி போன்ற நகரங்களிலிருந்தும், வெளிமாநிலங்களான கேரளா, பெங்களூரு, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்தும் மாடுகளை வாங்க  வியாபாரிகள் வருவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக இங்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்த அளவே காணப்படுகிறது. 3000-க்கு மேற்பட்ட மாடுகள் இந்த சந்தைக்கு வந்த நிலையில், தற்போது 1000 மாடுகள் மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு வந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர். பசுவதைத் தடைச்சட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வெளிமாநிலங்களுக்கு  செல்லும் மாடுகள் குறைந்து வெறிச்சோடி கிடந்தன. அதனைத் தொடர்ந்து அந்த தடை நீங்கியதால் கடந்த சில வாரங்களாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

    தற்போது கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், தீவன தட்டு போட்டாலும் மாடுகளை அதிக அளவில் விற்கவோ வாங்கவோ பலர் வருவதில்லை. சினையுடன் கூடிய பசு மாடுகள், எருமை மாடு போன்றவற்றை இங்கு 40 ஆயிரம் வரை விற்கப்பட்டன தற்போது ஆயிரம் ரூபாய் கூடுதலாக 50 ஆயிரம் 60 ஆயிரம் என்ற விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த காலங்களில் கணிசமான விலையில் விற்கப்பட்ட காளைகள் தற்போது மாடுகள் இல்லாத நிலையில் விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகின்றன. பல விவசாயிகள் மாட்டை  விற்றுவிடலாம் என எண்ணிய நிலையில் குறைந்த விலையில், மாநில அரசு தீவனத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதே போன்று வரத்து குறைந்த நிலையில் மாடுகளை கிட்டத்தட்ட 70,000 ரூபாயாக  உயர்ந்துள்ளதாகவும் மாடு வாங்க முடியவில்லை என்றும் விவசாயிகள்  தெரிவித்தனர்.

    கடந்த 20 வருடங்களாக வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கூறும்போது, தற்போது வரத்து குறைவான நிலையில் விலை உயர்ந்துள்ளதாகவும் 1500 மாடுகள் சந்தைக்கு  வந்த நிலையில் தற்போது அதில் ஒரு பங்கு மட்டுமே விற்பனைக்கு வந்ததாகவும், மீதி உள்ள மாடுகள் இறைச்சிக்காகவும் வறுமையில் இறந்து விட்டதாகவும்  பழைய கருப்பு நாட்டு மாடுகள் விற்பனைக்கு இல்லை என்றும் தற்போது கருப்புச்சட்டை மாடுகள் மட்டுமே விற்பனையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    Must Read : சுத்தியலா? சாவியா?... பேரூராட்சி தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சொன்ன ரகசியம்!

    மாட்டுச்சந்தை வாரத்தில் ஒரு நாள் நடந்தாலும்  தற்போது வெறிச்சோடி நிலையில் காணப்பட்ட இருப்பது மாட்டுச்சந்தை வியாபாரிகள் விவசாயிகளுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் - ஆர்.ரவிக்குமார், நாமக்கல்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bull, Namakkal

    அடுத்த செய்தி