திருச்செங்கோட்டில் கேபிள் ஆபரேட்டர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. கூலிப்படை கொடூரச் செயல்..

Youtube Video

திருச்செங்கோட்டில், பட்டப்பகலில் கேபிள் ஆபரேட்டர், கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய முருகன். இவருக்கு 38 வயதில் ராதா என்ற மனைவியும், ஹேமவர்ஷினி, பாலபிரியன் ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர். கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த முருகன், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழிலும் செய்து வந்துள்ளார். இவர் மீது, 10 ஆண்டுகளுக்கு முன்பு, தேவனாங்குறிச்சி பகுதியில்,  நிலத்தகராறு சம்பந்தமாக கொலை வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த பத்தாண்டுகளாக எந்த ஒரு வழக்கும் இவர் மீது பதியப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 7 மணி அளவில் கோவிலுக்கு செல்வதற்காக, மாலை வாங்கிக் கொண்டு, தனது இருச்சக்கர வாகனத்தில் நாமக்கல் விஐபி கார்டன் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை வழிமறித்து. கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இந்த தாக்குதில் முருகன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு நகர காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 10 ஆண்டுகளாக முருகன் மீது எந்த குற்ற பின்னணியும் இல்லாத நிலையில் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    முன்விரோதம் காரணமா? கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஜெயராமன், செல்வம், சூர்யா ஆகியோர் கூலிப்படையினர் 5 பேரை வைத்து கேபிள் ஆபரேட்டர் முருகனை கொலைசெய்தது தெரியவந்தது. ஜெயராமன் என்பவர் தான் கொடுத்த கடனை வசூலிக்க முற்பட்ட போது, அதனை கேபிள் ஆபரேட்டர் முருகன் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க... சென்னை செம்மஞ்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்திய 2 உயிரிழப்புகள்

    இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பர்கள் செல்வம் மற்றும் சூர்யாவுடன் இணைந்து கூலிப்படையினர் 5 பேர் உதவியுடன் முருகனை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர். இந்தகொலை தொடர்பாக 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.



    பட்டப்பகலில் கேபிள் ஆபரரேட்டர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: