Home /News /tamil-nadu /

Annamalai | யார் விலகினாலும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் - அண்ணாமலை அதிரடி

Annamalai | யார் விலகினாலும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் - அண்ணாமலை அதிரடி

அண்ணாமலை

அண்ணாமலை

அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறதுஎன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    நாமக்கல்லில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில்  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
    அ.தி.மு.க-வும் பாரதிய ஜனதா கட்சியும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது. மாநில அரசு கடந்த ஆறு மாத காலத்தில் என்ன புதிய திட்டத்தை மக்களுக்காக செய்தது. தமிழகத்தை பொறுத்தவரை மோடி அரசின் திட்டத்தை காப்பியடித்து மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.  மாநில அரசு சுயமாக எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்துவது இல்லை.

    Also Read:  நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை மீண்டும் அனுமதித்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தினசரி நடைபெறும் கொலை சம்பவங்களே முன்னுதாரணம்.தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதே தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்காக உள்ளது. 1994-ல் கள்ளச்சாராயம் காய்ச்சி கைதாகி குண்டாஸில் சிறையில் இருந்த அமைச்சர் காந்தி என்னை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.

    Also Read: பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

    கோமாரி நோய் தடுப்பூசி மத்திய அரசு தரவில்லை என மாநில   அமைச்சர் கூறுவது பொய். அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான கோமாரி நோய் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிப்பதாகவும், கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் எனக் கூறினார்.

    செய்தியாளர்: ரவிச்சந்திரன்  (நாமக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Annamalai, BJP, DMK, MKStalin, Politics

    அடுத்த செய்தி