Home /News /tamil-nadu /

பரமத்திவேலூரில் வெற்றிலையின் விலை படு வீழ்ச்சி.. வேதனையில் விவசாயிகள்

பரமத்திவேலூரில் வெற்றிலையின் விலை படு வீழ்ச்சி.. வேதனையில் விவசாயிகள்

பரமத்திவேலூரில் வெற்றிலை விலை வீழ்ச்சி

பரமத்திவேலூரில் வெற்றிலை விலை வீழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் 104 உலிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை 6,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. இந்தவாரம் முதல் வெறும் 3,000 ரூபாய்க்கு தான் விற்பனை ஆவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாண்டமங்கலம் பொத்தனூர், வேலூர், பாலப்பட்டி ,மோகனூர், உள்ளிட்ட காவிரி கரை பகுதிகளில் மிக ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டு வருகிறது. வெற்றிலைகளில் 3 வகை உள்ளது. பச்சை கொடி, கற்பூரவல்லி, சக்கை இவை 3ம் அதிக உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த வெற்றிலைகளை பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் அமைந்திருக்கும் வெற்றிலை மண்டியில் உள்ள வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், தென்மாவட்டம், வட மாவட்டம், தலைநகரமான சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இப்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கொரோனா நடைமுறை சட்டம் அமலுக்கு வந்தது. இதிலிருந்து கடைகளில் வெற்றிலைகள் அதிக அளவில் வியாபாரம் ஆவதில்லை. வெற்றிலை வாங்குவதற்கே பொதுமக்கள் முதல் வியாபாரிகள் வரை பயப்படுகின்றனர். அவர்கள் வெளியில் வந்தால் தானே வியாபாரம் நடக்கும். என்ரு விவசாயிகள் வேதனையாக கூறுகின்றனர்.

முன்பு வெற்றிலை வெளி மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போக்குவரத்து பொது முடக்கத்தால் இரவு ஒன்பது மணிக்கு அடைக்கப்பட்ட விடுகிறது. 104 உலிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை 6,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டிருந்தது.
இந்தவாரம் முதல் வெறும் 3,000 ரூபாய்க்கு விற்று கொண்டிருக்கிறோம். எங்களின் வாழ்வாதாரமே மிகுந்த கேள்விக்குறியாக உள்ளது என பரமத்திவேலூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வெற்றிலை பயிர் செய்யும் கொடி கால்களிலேயே வெற்றிலை அழுகும் சூழல் தற்போது நிலவுகிறது என்றும் இங்குள்ள வெற்றிலை மண்டியில் நாங்கள் கொண்டுவரும் வெற்றிலையும் விற்பனை ஆகாமல் அழுகி போகின்ற  நிலையில் உள்ளது என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர் .

மேலும் படிக்க... Egg Price | அதிரடியாக குறைந்தது முட்டை விலை... எவ்வளவு தெரியுமா?

மேலும் அரசாங்கம் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கும் பொருட்டாக எங்களுக்கு நஷ்டஈடு வழங்க முன்வர வேண்டும் என்றும் எங்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Farmers, Namakkal, Paramathi Velur Constituency

அடுத்த செய்தி