’ஒரு பெரிய சம்பவம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகனும்’- வங்கி கொள்ளையர்கள் வாக்குமூலம்

வங்கிக்கொள்ளை

ஒரே முறை தவறு செய்தாலும் கொள்ளையில் ஈடுபட்டாலும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்  என்ற நோக்கத்தில் வங்கியில் கொள்ளையடிக்க வந்ததாக கொள்ளையர்கள் வாக்குமூலம்.

  • Share this:
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையில் ஜன்னலை அறுத்து கொள்ளை முயற்சி திருச்செங்கோட்டை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் 23 வயது வாலிபர் என 2 பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைப்பு.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள இந்தியன் பேங்க் கிளையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு என இரவு நேரத்தில் கொல்லை முயற்சி நடைபெற்றுள்ளது வங்கியின் முன்புற டியூப் லைட்டுகளை மின் இணைப்பைத் துண்டித்தும் சிசிடிவி கேமராக்களில் இணைப்புகளை துண்டித்தும் வங்கியின்  ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு  கொள்ளையர்கள் வங்கியின் உள்நுழைந்து பாதுகாப்பு அறையை திறக்க  முயற்சித்த போது முடியாததால் திரும்பிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து  விசாரணை நடத்தினார்கள் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. விசாரனையில்கொள்ளை முயற்சி மட்டுமே நடைபெற்றுள்ளது தெரியவந்தது. பணம் நகைகள் எதும் கொள்ளை அடிக்க படவில்லை. இந்த நிலையில் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    Also Read: மதுரையில் தாயின் மறுமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன் - குவியும் பாராட்டு

    இந்த நிலையில் நேற்று காலை ராஜா கவுண்டம் பாளையத்தில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைப்பையை பறித்து சென்றதும் செல்போன் மற்றும் ரூ 2500 அதில் இருந்தது குறித்தும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்செங்கோடு மலை சுற்று பாதை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது பல்சர் பைக் ஒன்றில் வந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசி இதையடுத்து போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பெண்ணிடம் செல்போன் மற்றும் பணம் பறித்ததும் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டது இவர்கள்தான் என தெரியவந்தது.

    இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் வங்கிக் கொள்ளை முயற்சியில்  ஈடுபட்டது இவர்கள்தான் என தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் இவர்கள் திருச்செங்கோடு மாங்குட்டை பாளையத்தை சேர்ந்த அஜித் குமார் என்கிற சரவணகுமார் 23 மற்றும் சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஒரு சிறுவனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    Also Read:  கல்யாணத்துக்கு பிறகு 25 ஆண்களுடன் ஓட்டம் பிடித்த பெண் – ஒவ்வொரு முறையும் ஏற்றுக்கொள்ளும் காதல் கணவன்

    இதனையடுத்து அஜீத் (எ) சரவணகுமார் மற்றும்  சிறுவனையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த வாக்குமூலத்தில் தொடர்ந்து வங்கி நடவடிக்கைகளை கண்காணித்து வங்கியில் நகை பணம் அதிகமாக இருப்பதை தெரிந்து கொண்டு ஒரே முறை தவறு செய்தாலும் கொள்ளையில் ஈடுபட்டாலும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்  என்ற நோக்கத்தில், ஆசையில் வங்கியை கொள்ளையடிக்க சென்றோம். ஆனால் எங்களது நோக்கம் நிறைவேறவில்லை இதனையடுத்து உடனடி செலவுகளுக்காக நடந்து வந்த பெண்ணிடம் கைப்பையை படித்ததில் நாங்கள் சிக்கிக் கொண்டோம் அதோடு வங்கியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் எங்களை வங்கிக் கொள்ளை முயற்சியிலும் நாங்கள்தான் தொடர்புடையவர்கள் என கண்டுபிடித்து விட்டனர் என தெரிவித்தனர்.

    பின்னர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்செங்கோடு நகர போலீசார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அங்கு நீதிபதி சௌமியா மேத்யூ அஜித் என்கிற சரவணகுமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் அவர் ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் இதேபோல்  சிறிவன் சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    செய்தியாளர்: ரவிச்சந்திரன் ராஜகோபால் (நாமக்கல்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published: