Home /News /tamil-nadu /

கூலி தொழில் செய்யும் கணவருக்கு துணையாக மாட்டு வண்டி ஓட்டும் 65 வயது மூதாட்டி

கூலி தொழில் செய்யும் கணவருக்கு துணையாக மாட்டு வண்டி ஓட்டும் 65 வயது மூதாட்டி

பாக்கியம்

பாக்கியம்

ஆரம்ப காலங்களில் காசுமணியுடன் மாட்டு வண்டிகளில் ஏறிக்கொண்டு சோளத்தட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் பாக்கியம்.

  • News18
  • Last Updated :
    ராசிபுரம் அருகே 70 வயது கணவருக்குத் துணையாக மாட்டு வண்டி ஓட்டும் 65 வயது பெண் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். 

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காசிமணி (70). இவரின் மனைவி பாக்கியம் (65). காசிமணி ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பச்சையான சோளத்தட்டுகளை வாங்கி வந்து, அதனை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யும் தொழிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார்.

    ஆரம்ப காலங்களில் காசுமணியுடன் மாட்டு வண்டிகளில் ஏறிக்கொண்டு சோளத்தட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் பாக்கியம். இந்த நிலையில் கணவனுக்கு உதவியாக இருக்கும் என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் மாட்டு வண்டி ஓட்டக் கற்றுத் தருமாறு கேட்டுள்ளார் பாக்கியம். உதவியாக இருக்கும் என்று காசிமணி தனது மனைவிக்கு மாட்டு வண்டி ஓட்டுவது குறித்து கற்றுக் கொடுத்துள்ளார்.

    Also read... கொரோனாவிலிருந்து மீண்ட ஐந்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் - மருத்துவமனை ஆய்வில் தகவல்

    தற்போது, காசிமணி மாட்டுவண்டி ஓட்டுவதை குறைத்துவிட்டார். முழுமையாக பாக்கியமே கடந்த இரண்டு ஆண்டுகளாக ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமகிப்பேட்டை, மெட்டாலா, ஆண்டகளூர்கேட் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சோளத்தட்டு கேட்பவர்களிடம் வீட்டிற்கே சென்று விற்பனை செய்து வருகின்றன இந்த வயதான தம்பதிகள்.

    நடக்கவே முடியாத இந்த வயதில் பலர் உள்ள நிலையில், இந்த தம்பதி வெகு தூரம் சென்று விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஒரு முறை மாட்டுவண்டி ஓட்டிச்செல்லும்போது பள்ளி வேன் மோதியதில் பாக்கியத்திற்கு காலில் பலத்த அடி விழுந்துள்ளது.
    இருப்பினும், சில மாத ஓய்வுக்கு  பிறகு மீண்டும் மாட்டுவண்டி ஓட்டுகிறார். இந்நிலையில் காசிமணி வண்டி ஓட்டுவதையே தற்போது நிறுத்தி விட்டதால், பாக்கியமே முழுமையாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    -செய்தியாளர்: சுரேஷ்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி