நாமக்கல்லில் கறிக்கோழி விலை ஒரு கிலோ 160 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பேசிய தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இரண்டு வாரங்களாக, கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளதாக கூறினார். கடந்த இரண்டு நாட்களில், கொள்முதல் விலை 30 ரூபாய் சரிந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மட்டுமே 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கறிக்கோழி தேக்கம் போன்ற காரணங்களால், உற்பத்தியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சில்லரை விற்பனையில் ஒரு கிலோ 250 ரூபாய் வரை கறிக்கோழி விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களின் நுகர்வு சரிந்துள்ளதாகவும், சில்லரை விற்பனையாளர்கள் விலையை குறைத்தால் மீண்டும் கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும் என்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.