• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: கைதானவர்களின் ஜாமின் மனு ரத்து!

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: கைதானவர்களின் ஜாமின் மனு ரத்து!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கைதான இடைத்தரகர் அருள்சாமி, லீலா மற்றும் செல்வி ஆகியோர் ஜாமின் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் மூன்று பேரின் ஜாமினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கைதான இடைத்தரகர் அருள்சாமி உட்பட மூன்று பேரின் ஜாமின் மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பேரம் பேசி குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், இடைத்தரகர் அருள்சாமி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சேலம் மாவட்டம், எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த செவிலிய உதவியாளர் சாந்தியை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கைதான இடைத்தரகர் அருள்சாமி, லீலா மற்றும் செல்வி ஆகியோர் ஜாமின் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் மூன்று பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: