பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை

”மாணவனின் தற்கொலைக்கு செல்போன் தான் காரணமா?, வேறு ஏதாவது காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என தொடர் விசாரணை”

news18
Updated: August 23, 2019, 9:52 AM IST
பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரச்சொன்ன பேராசிரியர் - நாமக்கல் மாணவர் தற்கொலை
தற்கொலை செய்த மாணவன்
news18
Updated: August 23, 2019, 9:52 AM IST
நாமக்கல் அருகே பெற்றோரை கல்லூரிக்கு பேராசிரியர் அழைத்து வரச்சொன்னதால், பயந்துபோய் மாணவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளார்.

நாமக்கல் அடுத்த பளையபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவரது மகன் தீபக் (19). இவர் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வகுப்பறையில் மாணவன் தீபக் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்ததகவும் இதனை கண்ட பேராசிரியர் மாணவனை கண்டித்ததோடு செல்போனை பறிமுதல் செய்து பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வருமாறு கூறியதாக தெரிகிறது.


இதனால் மனமுடைந்த தீபக் நேற்று முழுவதும் வீட்டிற்கு செல்லாமல் அதிகாலையில் திருச்சி சாலையின் ரயில்வே மேம்பாலத்தின் அருகே உள்ள தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ளார். இதில் தீபக்கின் தலை துண்டானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே மற்றும் நாமக்கல் போலீசார் தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மாணவனின் தற்கொலைக்கு செல்போன் தான் காரணமா?, வேறு ஏதாவது காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published: August 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...