மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..அரசு அதிகாரி உட்பட 11 பேர் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

இந்த விவகாரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தெரிய வரவே, விசாரணை நடத்தப்பட்டு தாய் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  வட்டமலை குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த பத்மநாபன், மகேஸ் தம்பதியினருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் கடைசி மகள் தனது சகோதரியின் வீட்டில் சில காலம் தங்கியுள்ளார். இந்நிலையில் அக்கா கணவர் சின்ராஜ் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரது நண்பர்கள் சிலரும் சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தனது தாயிடம் கூற 10 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு மகளை அங்கிருந்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது

  மேலும் சிறுமி பணிபுரிந்து வந்த வீட்டின் உரிமையாளர் கண்ணன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பன்னீர், மூர்த்தி, அபி, கோபி உள்ளிட்டோரும் தொடர்ந்து சிறுமியிடம் அத்துமீறி வந்துள்ளனர். இந்த விவகாரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தெரிய வரவே, விசாரணை நடத்தப்பட்டு தாய் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: