ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நல்லகண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

நல்லகண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

நல்லகண்ணு

நல்லகண்ணு

நல்லகண்ணுவின் உடல்நிலை சீராகவுள்ளதாகவும், பொதுப்பிரிவு மருத்துவர்கள், சிறுநீரகவியல்துறை மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவுக்கு (97) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை 6.15 மணியளவில் அவர் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  ALSO READ | காந்திய மண்ணில் வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  இந்த நிலையில், இவரது உடல் நலம் குறித்து பேசிய மருத்துவமனையின் முதல்வர், நல்லகண்ணுவின் உடல்நிலை சீராகவுள்ளதாகவும், பொதுப்பிரிவு மருத்துவர்கள், சிறுநீரகவியல்துறை மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும், கொரோனா, டெங்கு போன்ற காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Nallakannu, Rajiv gandhi Hospital