பேரறிவாளனைத் தொடர்ந்து நளினி உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட வாய்ப்பு - நளினியின் சகோதரர் நம்பிக்கை
பேரறிவாளனைத் தொடர்ந்து நளினி உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட வாய்ப்பு - நளினியின் சகோதரர் நம்பிக்கை
நளினி
Perarivalan Release: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை, சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நளினி உள்ளிட்ட மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக நளினியின் சகோதரர் கூறியுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை, சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருப்பதாக நளினியின் சகோதரர் பாக்யநாதன் தெரிவித்துள்ளார். நளினிக்கு மட்டுமல்லாது நீண்டநாள் சிறைவாசத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சிறைவாசிக்கும் நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பு என்று கூறியுள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் சட்டமன்றத்தின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டவர் என நீதிபதிகள் தெரிவித்திருப்பதால் இனி தமிழக அரசு நல்ல முடிவெடுக்கும் என தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் பாக்யநாதன் கூறியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.