முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி கடிதம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி கடிதம்!

7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் பரிதவித்து வருகிறோம். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் பரிதவித்து வருகிறோம். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் பரிதவித்து வருகிறோம். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுவிக்க தமிழக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நளினி கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பிய போதும், 5 மாதங்களாக எந்தவொரு முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்தியாவில் அதிக ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வரும் பெண்ணாக தான் உள்ளேன். 7 பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 7 பேரும் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் பரிதவித்து வருகிறோம். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து விரைந்து ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். கடைசி நம்பிக்கை என்பதால் எங்களின் வாழ்க்கை உங்கள் கையில் தான் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:

First published:

Tags: Nalini, Rajiv case