ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சரை சந்திக்க தயக்கமாக இருக்கிறது- ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான நளினி

முதலமைச்சரை சந்திக்க தயக்கமாக இருக்கிறது- ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான நளினி

"இந்த குண்டு வெடிப்பில் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருத்தப்படுகிறேன்."

"இந்த குண்டு வெடிப்பில் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருத்தப்படுகிறேன்."

"இந்த குண்டு வெடிப்பில் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருத்தப்படுகிறேன்."

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து முருகனை விடுவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்தார்.

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான நளினி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், “தூக்கு தண்டனை கிடைத்தபோது வாழ்க்கையே வெறுத்தேன். எந்த நேரமும் அழுது கொண்டே இருந்தேன். கட்டாயம் படிக்க வேண்டும் என சொன்னார்கள். படித்ததற்கு பின் நான் தேறினேன்.” என கூறினார்.

  மேலும், தான் 6 ஆண்டுகள் கல்வி கற்றதாக தெரிவித்த அவர், எம்.சி.ஏவில் ஒரு சப்ஜெக்டில் 198 மதிப்பெண் எடுத்ததையும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷன், பிசினஸ் ஸ்கில்ஸ் போன்ற படிப்புகளை படித்ததாகவும் தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், “விடுதலை தொடர்பான வழக்கில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்தோம். விடுதலைக்கு உதவிய மத்திய - மாநில அரசுக்கும் அன்பை பொழிந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. 7 பேர் விடுதலைக்காக போராடியவர்களை சந்தித்து நன்றி சொல்ல ஆசையாக உள்ளது.

  இந்த குண்டு வெடிப்பில் பிரதமரே உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருத்தப்படுகிறேன். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார்.

  ''12 வருஷத்துக்கு முன்னாடியே தமிழ்லதான் பொறியியல்''.. அமித்ஷா யோசனைக்கு பொன்முடி பதில்! (news18.com)

  மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பது அவருக்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால் அவரை சந்திக்க தயக்கமாக உள்ளது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து முருகனை விடுவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Nalini, Rajiv Gandhi Murder case