ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive: 'ஜெயில் எனக்கு கற்றுக்கொடுத்தது இதுதான்' - மனம் திறந்த நளினி

Exclusive: 'ஜெயில் எனக்கு கற்றுக்கொடுத்தது இதுதான்' - மனம் திறந்த நளினி

நளினி பேட்டி

நளினி பேட்டி

சூப்பிரடெண்ட் நான் கடைசிவரை சிறையிலேயே இருப்பேன் என கூறும்போது நான் அழுதுவிடுவேன்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்து, பல சட்டபோராட்டத்திற்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

  இந்நிலையில், விடுதலையான நளினி, நியூஸ் 18க்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார், அதில் அவர் தான் இந்த சிறையில் உள்ள அந்த சூழ்நிலையை முடிந்தவரை ஒதுக்கிவைத்துக்கொண்டு நல்ல முறையில் உபயோகித்ததாக கூறினார். மேலும் அந்த பேட்டியில் அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

  இதையும் படிக்க : இனி குடும்பத்தலைவியாக வாழப் போகிறேன்: விடுதலையான பின் நளினி நெகிழ்ச்சி!

  கேள்வி : 32 வருடம் சிறைச்சாலையில் உங்களுக்கு கொடுத்த பாடம் அல்லது உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவம் என்ன?

  நளினியின் பதில் : சிறையில் எனக்கு பல மறக்க முடியாத அனுபவங்கள் இருந்தன. சமுதாயத்தினுடைய கடைசி இடம் அது தான் அதாவது சமுதாயத்தின் கழிவான இடம் அது. அந்த இடத்தில் நான் இருக்க வேண்டிய நிலைமை வந்தது. இருந்தாலும் என்னை முடிந்தவரை என்னை அந்த இடத்தை ஒதுக்கிவைத்துக்கொண்டு, அந்த இடத்தையும் சிறப்பாக நான் உபயோகித்ததாகவே நினைக்கிறேன்.

  கேள்வி : நம்பிக்கையோடு இருப்பதாக சொன்னீர்கள். அது வாரமோ, மாதமோ அல்ல. 32 இரண்டு ஆண்டுகள் நம்பிக்கையோடு இருந்தீர்களா?

  நளினியின் பதில் : நிச்சயமாக. நான் தவறு செய்யவில்லை என்பதாலும், என்னுடைய மனசாட்சி சுத்தமாக இருந்ததாலும் நான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து நான் விடுதலை செய்யப்படுவேன் என மிகவும் நம்பிக்கையுடன் தான் இருந்தேன். சிறையில் பல பேர், நீ கடைசி வரை இங்கேயே தான் இருக்க போகிறீர்கள் என சொல்லுவார்கள். அங்கே எல்லாரும் ஒரு எதிர்மறை சிந்தனையோடு தான் இருந்தார்கள். எனது சூப்பிரடெண்ட் கூட நான் சிறையிலேயே இருப்பேன் என கூறும்போது நான் அழுதுவிடுவேன். மேலும் என்னை மட்டும் ஏன் இப்படி கூறுகிறீர்கள் என கேட்ட போது, நீ வாழ்நாள் சிறைவாசி. இங்கேயே தான் இருக்கப்போகிறாய் என கூறும்போது. எல்லாரும் தான் வாழ்நாள் சிறைவாசி. அனைவரும் சிறையிலேயே இருந்துவிட்டால் சிறை இந்நேரம் நிரம்பி வழிந்திருக்குமே. நான் நிச்சயம் ஒரு நாள் வெளியே போவேன் என அவர்களிடம் கூறுவேன்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Exclusive, Nalini, Rajiv convicts, Rajiv gandhi, Rajiv Gandhi Murder case