பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்கக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி!

மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்கக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: September 12, 2019, 10:54 AM IST
  • Share this:
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி, பரோலை அக்டோபர் 15 தேதி வரை நீட்டிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி ஜூலை 25 முதல் பரோலில் உள்ள அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்து விடுவார் என்பதாலும் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது சம்பந்தமாக அனுப்பிய கோரிக்கை மனுவை அரசு நிராகரித்து விட்டதாகவும் நளினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க கோருகின்றனர் எனக் கூறி, பரோல் நீட்டிப்பு வழங்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முதலில் மனுதாரர் நேரில் ஆஜரானார், அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போது மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது. தற்போதும் நீட்டிப்பு வழங்க கோருகிறார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என, பரோல் நீட்டிப்பு வழங்க நீதிபதிகள் மறுத்தனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see...

First published: September 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்