கைதிகள் விடுதலை - அரசுக்கு எதிராக நளினி மனு

news18
Updated: February 13, 2018, 8:55 PM IST
கைதிகள் விடுதலை - அரசுக்கு எதிராக நளினி மனு
நளினி
news18
Updated: February 13, 2018, 8:55 PM IST
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி, மனுத்தாக்கல் செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான அரசாணையையும் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்டது.

இந்திய குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 435 வது பிரிவின் படி சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்குகளில்
தண்டனை பெற்றவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, ராஜிவ் காந்தி கொலை  வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு வழக்கின் பின்னணியை ஆராயக் கூடாது என்றும், முன் கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையை அனைத்து கைதிகளுக்கும் சமமாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாணையில் உள்ள விதிகளில் ஒன்றான ’435 பிரிவின் கீழ் விடுதலை செய்யமாட்டோம்' என்பதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் நளினி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading...
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்