Home /News /tamil-nadu /

நளினிக்கு ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு

நளினிக்கு ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு

நளினிக்கு ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு

நளினிக்கு ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாதம் காலம் பரோல் வழங்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இர்ந்த தீர்மானம் குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன்வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னை கவனித்து கொள்ள சிறையில் இருக்கும் நளினியை ஒரு மாதம் காலத்திற்கு பரோலில் விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.



    இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில் நளினிக்கு ஒரு மாதம் காலம் பரோல் முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இதையடுத்து 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஒரு மாதம் காலம் பரோலில் விடுவிக்கப்பட உள்ளார்.

    Also Read : தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு இருந்த அறிகுறி என்ன? அமைச்சர் விளக்கம்
    Published by:Vijay R
    First published:

    Tags: Nalini, Rajiv Gandhi Murder case

    அடுத்த செய்தி