ஆளுநர் புகார் விவகாரம்: நக்கீரன் ஊழியர்கள் 35பேர் முன்ஜாமீன் கேட்டு மனு

news18
Updated: October 11, 2018, 2:12 PM IST
ஆளுநர் புகார் விவகாரம்: நக்கீரன் ஊழியர்கள் 35பேர் முன்ஜாமீன் கேட்டு மனு
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: October 11, 2018, 2:12 PM IST
ஆளுநர் புகார் தொடர்பாக நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து நக்கீரன் வார இதழில் செய்திக் கட்டுரைகள் வெளியாகி வருகிறது. இக்கட்டுரைகள் மூலம் ஆளுநர் மீது அவதூறு பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு காவல்துறையினர் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.

பின்னர் எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்று மாலையே அவரை விடுவித்தது. இந்த நிலையில் நக்கீரன் பொறுப்பாசிரியர் ஆசிரியர் லெனின் உள்ளிட்ட நக்கீரன் வார இதழ் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், ஆளுநர் அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்ய வாய்ப்புள்ளதால், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மனு நாளை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...