Home /News /tamil-nadu /

அதிமுக குறித்து பாஜகவின் நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் எதிர்ப்பு

அதிமுக குறித்து பாஜகவின் நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் எதிர்ப்பு

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

இதனிடையே நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    அரியலூர் சிறுமியின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு பாஜக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை என பேசியதுசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மதமாற்றமே காரணம் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் பாஜக தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சிறுமி இறப்புக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பொது செயலாளர் கருநாகராஜன், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், நடிகர் செந்தில், நடிகை காயத்ரி ரகுராம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

    நிகழ்வில் பேசிய நயினார் நாகேந்திரன்,  அதிமுக எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேச அதிமுகவில் ஒருவரும் இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எதிர்கட்சியாக இல்லையென்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டிக்கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என்று பேசியதாக கூறப்படுகிறது.



    கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்தவரும் இதற்கு முன்பு அதிமுகவில் இருந்தவருமான நயினார் நாகேந்திரனின் பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த ராஜ் சத்யன் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் @NainarBJP , நீங்கள் வேண்டுமானால் @AIADMKOfficial தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ….??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்….!! என்று பதிவிட்டுள்ளார்.



    இதனிடையே தனது பேச்சு தொடர்பாக நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்” என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்திய மொழிகளின் அறிவை தமிழக மாணவர்களுக்கு மறுப்பது சரியில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, BJP, Nainar Nagendran

    அடுத்த செய்தி