பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்

நயினார் நாகேந்திரன்

பட்டியல் அறிவிப்புக்கு முன் வேட்பு மனுதாக்கல் செயததற்கு நல்ல நேரம் என்பது மட்டும் தான் காரணம் என்று அக்கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான  கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்ச் 10-ம் தேதி தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து பாஜக தொகுதிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், “பாஜக சார்பில் போட்டியிடுகிறேன். வேட்பாளர் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பார்கள். அதற்கு முன்பே வேட்பு மனுதாக்கல் செயததற்கு நல்ல நேரம் என்பது மட்டும் தான் காரணம். அதிமுகவினர் தொடர்ந்து ஒத்துழைப்பு தருவார்கள்.

    ஜவுளி பூங்கா உள்ளிட்ட தொகுதிக்கு தேவையான திட்டங்கள் வருவதற்கு முழு முயற்சி எடுப்பேன். 5-வது முறையாக இதே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிப்பேன்” என்று தெரிவித்தார்.

    1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3.குளச்சல் 4. விளவன்காடு 5.ராமநாதபுரம் 6. மொடக்குறிச்சி 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு 9. திருக்கோவிலூர். 10.திட்டக்குடி, 11. கோயம்புத்தூர் (தெற்கு) 12. விருதுநகர். 13. அரவக்குறிச்சி. 14. திருவையாறு, 15.உதகமண்டலம் 16. திருநெல்வேலி 17. தளி 18. காரைக்குடி 19.தாராபுரம்(தனி) 20. மதுரை (வடக்கு) ஆகிய தொகுதிகள் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
    Published by:Sheik Hanifah
    First published: