ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டீடாக்ஸ் உணவுகளில் ஆவி பறக்க விற்பனையாகும் கருப்பு இட்லி : எங்கு கிடைக்கிறது தெரியுமா?

டீடாக்ஸ் உணவுகளில் ஆவி பறக்க விற்பனையாகும் கருப்பு இட்லி : எங்கு கிடைக்கிறது தெரியுமா?

கருப்பு இட்லி

கருப்பு இட்லி

இட்லி வேகவைத்து எடுத்து அதன் மீது நெய் ஊற்றி மிளகாய் பொடியை தூவும் காட்சிகள் காண்போரை எச்சில் ஊற செய்யும் வகையில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மோமோ முதல் சமோசா வரை பல்வேறு விதவிதமான உணவுகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். இதனால் மக்கள் கிளாசிக் உணவுகளுக்கு திரும்பி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான உணவுகள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. அந்தவரிசையில் தற்போது புதிய உணவு ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் ஒரு வித்தியாசமான இட்லியை உங்களால் காண முடியும். இட்லி தானே.. அதில் என ஸ்பெஷல் என்கிறீர்களா? அந்த இட்லி சாம்பல் கலந்த கருப்பு நிறத்தில் உள்ளது.

இந்த வீடியோவை நாக்பூரைச் சேர்ந்த விவேக் மற்றும் ஆயிஷா என்பவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளனர். அதில், ஒருவர் கருப்பு நிறத்தில் இருக்கும் இட்லி மாவை எடுத்து தட்டில் ஊற்றுகிறார். இட்லி வேகவைத்து எடுத்து அதன் மீது நெய் ஊற்றி மிளகாய் பொடியை தூவும் காட்சிகள் காண்போரை எச்சில் ஊற செய்யும் வகையில் உள்ளது. பின்னர் மீண்டும் ஒரு முறை நெய் சேர்த்து சட்னி ஊற்றி பரிமாறும் காட்சிகள் உள்ளது.

இந்த போஸ்டில், எப்போதாவது கருப்பு நிற இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா? என தலைப்பிட்டுள்ளனர். மேலும் ,“கருப்பு இட்லி. இது ஒரு டிடாக்ஸ் இட்லி. கர்ப்பிணிப் பெண்களுக்கு அல்ல,” என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாக்பூரில் உள்ள வாக்கர்ஸ் தெருவில் உள்ள ஆல் அபௌட் இட்லி என்ற இடத்தில் கருப்பு இட்லிகள் கிடைக்கும், 6.30 மணிக்கு வாங்கி கொள்ளலாம் என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ஒரு வாரங்களுக்கு முன்னர் ஷேர் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. "வெள்ளை நிற இட்லியில் என்ன பிரச்சனை?" என்று யூசர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். "அண்ணா தயவு செய்து இப்படி செய்வதை நிறுத்துங்கள்" என்று மற்றொருவரும் கமெண்ட் செய்துள்ளார்.

நாச்சோஸ் சாப்பிட ரொம்ப பிடிக்குமா..? அதை தொட்டுக்கொள்ளும் சீஸ் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

முன்னதாக குச்சி இட்லி வைரலானது. பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று, இட்லியை குச்சிஐஸ்கிரீமை போல வடிவமைத்திருந்தது. அதாவது, சாக்கோ பார் ஐஸ்கிரீமை போன்று இட்லி வடிவமைக்கப்பட்டு அது குச்சியில் சொருகி வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அருகே சாம்பார், சட்னி ஆகியவை கின்னத்தில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்டது.

இந்த குச்சி இட்லியின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பதிவில், “ஆராய்ச்சித் துறையின் தலைநகரமாக அறியப்படும் பெங்களூரு, உணவுத்துறையிலும் தனது புதிய சிந்தனையை புகுத்தியுள்ளது. ஐஸ்கிரீம் இட்லி அனைவரையும் கவர்ந்திருக்கிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published: