Home /News /tamil-nadu /

வீட்டுக் கூரையை சரி செய்யமுடியாமல் தவித்த ஏழை தம்பதி: ஓடி வந்து உதவிய தன்னார்வலர்கள்

வீட்டுக் கூரையை சரி செய்யமுடியாமல் தவித்த ஏழை தம்பதி: ஓடி வந்து உதவிய தன்னார்வலர்கள்

கடந்த 50 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கி, வருமானம் இல்லாமல் தவித்து வந்த அவர்கள் ரேஷன் அரிசியை நம்பியே நாட்களை நகர்த்தி வந்துள்ளனர்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கி, வருமானம் இல்லாமல் தவித்து வந்த அவர்கள் ரேஷன் அரிசியை நம்பியே நாட்களை நகர்த்தி வந்துள்ளனர்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கி, வருமானம் இல்லாமல் தவித்து வந்த அவர்கள் ரேஷன் அரிசியை நம்பியே நாட்களை நகர்த்தி வந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கூலி வேலை செய்து வந்தவர்கள் தமிழக அரசினால் வழங்கப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை வைத்தே வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் பண்டக சாலைத் தெருவைச் சேர்ந்தவர்கள் பக்கிரிசாமி, ரமணி தம்பதியினர். மூன்று குழந்தைகளை வைத்துகொண்டு சிரமப்படும் ரமணி, வீட்டு வேலை செய்துவருகிறார், பக்கிரிசாமி ஒரு கூலித் தொழிலாளி. நாகை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக நாகூர் பகுதியில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அந்த தம்பதிகள் வசித்து வந்த பண்டக சாலைத் தெரு முற்றிலும் அடைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலைக்குச் செல்ல முடியாமல் கடந்த 50 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கி, வருமானம் இல்லாமல் தவித்து வந்த அவர்கள் ரேஷன் அரிசியை நம்பியே நாட்களை நகர்த்தி வந்துள்ளனர். கடந்த சில தினங்களாக வெயில், மழை, காற்று என மாறிமாறி அடித்தால் அவர்களது வீட்டின் கூரை காற்றில் பறந்திருக்கிறது; விளம்பர கட்அவுட்டுகளை வைத்து கூரையை மூடி குடியிருந்துள்ளனர். உடனே அவர்களின் கஷ்டத்தை அப்பகுதி இளைஞர்கள் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் பரப்பவே, அதனைக் கண்ட நாகையைச் சேர்ந்த மனசாட்சி நட்பு கரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் சம்பத் மற்றும் சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் ஆகியோர் நிதி திரட்டி அவர்களுக்கு புதிய தார்ப்பாலின் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கின்றனர்.

இதேபோல கூரை வீணாகி மழை வெயிலில் சிரமப்படும் அதே பகுதியைச் சேர்ந்த மாயவேல் - ஜெயலட்சுமி குடும்பத்திற்கும் ஒரு தார்பாலின் வழங்கப்பட்டது. மேலும், விரைந்து நிதி திரட்டி ரமணி பக்கிரி குடும்பத்திற்கு புதிதாக கூரை மாற்றித்தர உதவி செய்கிறோம் என மனசாட்சி நட்பு கரங்கள் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் உறுதி அளித்துள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Lockdown, Nagapattinam

அடுத்த செய்தி