கணவரிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை

கணவருடன் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீடியோ காலில் இருந்த கணவர் கண் முன்னாலேயே விஷம் குடித்துள்ளார்

  • Share this:
நாகர்கோவில் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் கணவர் கண் முன்னே மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அமராவதிவிளையைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஓமன் நாட்டில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி 31 வயதான ஆக்னஸ் நந்தா. இவர்களுக்கு திருமணமாகி ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கணவர் வெளிநாட்டில் இருப்பதால், ஆக்னஸ் நந்தா தன் தாய் தந்தையருடன் வசித்து வருகிறார்.

கடந்த இரு தினங்களாக செல்வராஜாவுக்கும் நந்தாவுக்கும் இடையே செல்போனில் தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை கணவருடன் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீடியோ காலில் இருந்த கணவர் கண் முன்னாலேயே விஷம் குடித்துள்ளார்.


பதறிய கணவர் மனைவி வீட்டாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆக்னஸ் நந்தாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் உள்ளதால் ஆக்னஸ் நந்தாவின் இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கணவரிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவி, அவர் கண் முன்னாலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
 
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading