பல புகார்கள் வந்தும் 10 ஆண்டுகளாக சிக்காத காசி தற்போது சிக்கியது எப்படி...?

பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த காசி, மறுபக்கம் அரசியல் அதிகாரத்தின் போதையில் மூழ்கியிருக்கிறார். 

பல புகார்கள் வந்தும் 10 ஆண்டுகளாக சிக்காத காசி தற்போது சிக்கியது எப்படி...?
காசி
  • News18
  • Last Updated: May 4, 2020, 12:41 PM IST
  • Share this:
கவர்ந்திழுக்கும் சிக்ஸ் பேக், சரளமான ஆங்கிலம் என படித்த 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மயக்கி மோசடி செய்த காசி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்களின் அந்தரங்க வீடியோக்களைப் பதிவு செய்து பண வசூல் செய்தவர் சிக்கியது எப்படி?

விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காசிக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உதவியிருக்கிறது. சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை காட்டிய காசி, 10 ஆண்டுகளாக போலீசில் சிக்கவில்லை.

உள்ளூர் பெண்கள் தொடங்கி, வெளிமாநில பெண்கள் வரை மோசடி செய்த காசியை, போலீஸார் வலையில் சிக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பல நேரங்களில் தோல்வியில் முடிந்துள்ளன. அதற்கு, காசியின் அரசியல் செல்வாக்கு, அதிகார மட்டத்தில் உள்ளவர்களின் தொடர்பு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.


பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த காசி, மறுபக்கம் அரசியல் அதிகாரத்தின் போதையில் மூழ்கியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் புகாரளித்தபோது, உடனே காசியை போலீசார் கைது செய்யவில்லை. சென்னையில் கொடுக்கப்பட்ட புகார், கன்னியகுமரிக்கு மாற்றி அவரை கைது செய்ய கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆனது

அதிலும், சென்னை பெண் மருத்துவர் கடைசி நேரத்தில் புகாரை வாபஸ் பெறச்சொல்லி பல தரப்புகளிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அவரும் புகாரை வாபஸ் பெறலாம் என நினைத்தபோது, காசியால் ஏமாற்றப்பட்ட பெங்களூரு பெண் மருத்துவரிடம் பேசி மனஉறுதி அளித்தாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்தே, காசியை கைது செய்ய போலீசார் முடிவு செய்து திட்டம் வகுத்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காசிக்கு எதிராக புகார் அளித்தால், காசியின் கும்பலைச் சேர்ந்த யாராவது அந்தரங்க புகைப்படங்களை கசியவிட்டுவிடுவார்கள் என பெண்கள் மத்தியல் அச்சம் நிலவுகிறது.காசிக்கு எதிராக புகார் அளித்தால், தங்களது தனிப்பட்ட வாழ்வுக்கு சிக்கல் ஏற்படுமோ என பெண்கள் கருத வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காசி மட்டுமல்ல; காசியுடன் தொடர்பில் இருந்த 20 பேரின் பட்டியலையும் போலீசார் தயாரித்துள்ளனர்.

காசிக்கு உதவியவர்கள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. விரைவில் மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்றும் கன்னியாகுமாரி போலீசார் கூறியுள்ளனர்.


First published: May 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading