• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை" - பார் நாகராஜ்!

"ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை" - பார் நாகராஜ்!

பார் நாகராஜ்

பார் நாகராஜ்

தன் மீதான அடிதடி வழக்குகளில் காவல் துறையினர் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அதில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் பார்நாகராஜ் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில் இருப்பது தானல்ல எனவும், சதீஷ் என்பவர்தான் அந்த வீடியோ  காட்சிகளில் இருப்பவர் என பார் நாகராஜ் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக 3 வீடியோ காட்சிகள் வெளியானது.

இதில் இருப்பது பார் நாகராஜ் மற்றும் சதீஷ் என்று சொல்லப்பட்ட நிலையில் அந்த காட்சிகளில் இருப்பது தான் இல்லை என்று பார்நாகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது சதீஷ் என உறுதி செய்துள்ள அவர், தன் மீது அடிதடி வழக்குகள் மட்டுமே இருப்பதாகவும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கோ, குற்றச்சாட்டு தன் மீது கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பார் நாகராஜ் விளக்கம் அளித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் தன் மீதான அடிதடி வழக்குகளில் காவல் துறையினர் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அதில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் பார்நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: