Home /News /tamil-nadu /

நாகையில் சூடம் ஏற்றி வணங்கி பேருந்து சேவையை தொடங்கிய ஓட்டுநர்கள்

நாகையில் சூடம் ஏற்றி வணங்கி பேருந்து சேவையை தொடங்கிய ஓட்டுநர்கள்

நாகை பேருந்து ஓட்டுநர்

நாகை பேருந்து ஓட்டுநர்

நாகப்பட்டினத்தில் சூடம் ஏற்றி பேருந்து ஓட்டுநர்கள் 60 நாள்களுக்குப் பிறகான தங்களது பணியைத் தொடங்கினர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு இன்று முதல் 50 சதவிகித பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக நாகை பனிமனையில் இருந்து 63 நாட்களுக்கு பிறகு பேருந்தை எடுக்கும் ஓட்டுனர்கள் சூடம் ஏற்றி வணங்கி பணிகளை தொடங்கினர்.

நாகை மண்டலத்தின் கீழ் செயல்படும் நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம், சீர்காழி, பொறையார், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர், மன்னார்குடி, சிதம்பரம், காரைக்கால் ஆகிய 11 பனிமனைகளில் 325 பேருந்துகள் என்று இயக்கப்பட்டன. குறிப்பாக நாகை மாவட்டத்தில் மட்டும், நாகை பனிமனையில் இருந்து 33 பேருந்துகளும், சீர்காழி பனிமனையில் இருந்து 23 பேருந்துகளும், மயிலாடுதுறை பனிமனையில் இருந்து 44 பேருந்துகளும், வேதாரணியம் பனிமனையில் இருந்து 29 பேருந்துகளும், பொறையர் பனிமனையில் இருந்து 14 பேருந்துகளும் இயக்கப்படுகிறது, நாகை மாவட்டத்தில் மட்டும் 143 பேருந்துகள் இயக்கப்பட்டன.

நாகை மண்டலத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் குறைந்த அளவிலான பொதுமக்கள் மட்டுமே பேருந்தில் பயணம் செய்கின்றனர். பயணிகளுக்கு நடத்துனர்களால் கிருமிநாசினி கொடுக்கப்படுவதுடன் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்த பிறகே பேருந்தின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி