பால் விற்பனையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த நாகை போலீஸ்காரர்...

சமூக ஊடகத்தில் பால் விற்பனையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த நாகை காவலரிடம் மாவட்ட எஸ்பி விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார்.

பால் விற்பனையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த நாகை போலீஸ்காரர்...
காவலர் ரமணன்.
  • Share this:
சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் கைது செய்யப்பட்டு காவல் துறை தாக்கியதில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பால் விற்பனையாளர்கள் காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் எடுக்க அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் சம்பத்தை சுட்டிக்காட்டி நாகை டிஎஸ்பி வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் ரமணன் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம் என்று மிரட்டும் தொனியில் செய்துள்ள அவரது முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

காவலரின் முகநூல் பதிவு.காவலர் ரமணன் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நாகை எஸ்பி செல்வ நாகரத்தினம் விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார்.


சாத்தான்குளம் தந்தை மகன் மர்ம மரணம் தொடர்பாக மக்கள் காவல்துறை மீது அதிருப்தியில் இருக்கும் சூழலில் நாகை காவலரின் முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading