நாகை நகரக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சர் அகமது தெருவில் பணி முடிந்து வீடு திரும்பிய வடக்கு நல்லியாந்தோட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகள் மகாலெட்சுமி என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தொலைபேசியைப் பிடிங்கிச் சென்றனர்.
அதனை அடுத்து புகாரின் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்படி தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அக்கரைபேட்டையைச் சேர்ந்த பூபாலன் மற்றும் பிரவீன் எனத் தெரிய வந்தது.
Also see:
பின்னர் மேற்கண்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மாதவன் என்பவரது இருசக்கர வாகனத்தை பூபாலன், வாசு, நவீன் உள்ளிட்ட மூவரும் சேர்த்து திருடியது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட இரண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.