காதல் திருமணம்: காணமால் போன கணவரை கேட்ட பெண்ணை தாக்கிய மாமனார்!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், தனது வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்ற கணவர் கார்த்தி, திரும்பி வராததால் மாமனார் வீட்டில் மனைவி ஜெயசுதா தர்ணாவில் ஈடுபட்டார்.

காதல் திருமணம்: காணமால் போன கணவரை கேட்ட பெண்ணை தாக்கிய மாமனார்!
காணமல் போன கணவரை கேட்டதால் தாக்கப்பட்ட ஜெயசுதா
  • News18
  • Last Updated: October 23, 2018, 1:52 PM IST
  • Share this:
நாகை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண், மாமனார் வீட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள கீழையூரைச் சேர்ந்த ஜெயசுதாவும், செம்பதனிருப்பை பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், தனது வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்ற கணவர் கார்த்தி, திரும்பி வராததால், மாமனார் வீட்டில் ஜெயசுதா தர்ணாவில் ஈடுபட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கீழையூரை சேர்ந்தவர் ஜெயசுதா. இவரும் செம்பதனிருப்பை சேர்ந்த கார்த்திக்கும் கல்லூரிக்கு செல்லும்போது ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதில் ஜெயசுதா டிப்ளமா ஐடியும், கார்த்தி எம்.பி.ஏ-வும் படித்துள்ளார்.

2012- ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தவர்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி கடலூரில் பதிவுத்திருமணம் செய்துக்கொண்டு கீழையூரில் உள்ள ஜெயசுதாவின் வீட்டிலேயே வசித்துவந்தனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு, கார்த்திக் தன் மாமாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் தான் அவரை பார்க்கப்போகிறேன் என்றும் கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.


தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயசுதா


தாங்கள் திருமணம் செய்துகொண்டது கணவரது குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. தன் கணவருக்கு ஏதாவது ஆகியிருக்கலாம் என்று அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்காமல் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதனைத்  தொடர்ந்து 3 நாட்கள் மனைவி ஜெயசுதா அங்கேயே காத்திருந்து தர்ணாவில் ஈடுப்பட்டார். அதனால்  ஆத்திரமடைந்த ஜெயசுதாவின் மாமனார், மாமியார், கணவர் கார்த்திக்கின் தம்பி உட்பட பலர் ஜெயசுதாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் அடிபட்டுகிடந்த ஜெயசுதாவை மயிலாடுதுறைஅரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் ஜெயசுதா தனது கணவரை  மீட்டு தர வேண்டும் என்றும் தன்னைக் கொடுமைப்படுத்தியவர்கள் மீது தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.Also see...

First published: October 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading