நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 77.64% வாக்குகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பதிவாகின.

Web Desk | news18
Updated: March 15, 2019, 4:41 PM IST
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
நாகப்பட்டினம்
Web Desk | news18
Updated: March 15, 2019, 4:41 PM IST
மீனவ மக்கள் அதிகம் வாழும் கடற்கரை பகுதியான நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி 1957-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி.

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி அதன் பின்னர், சி.பி.ஐ கட்சியிடம் சிறிது காலம் இருந்தது. பின்னர், தி.மு.க 4 முறை நாகப்பட்டினத்தைக் கைப்பற்றியது.


அதிலும் தி.மு.க வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 1999, 2004 மற்றும் 2009 என தொடர்ந்து 3 முறை வெற்றி வேட்பாளராக இருந்தார். கடைசியாக நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஆர். கோபால் 4,34,174 வாக்குகளைப் பெற்று வெற்றியைத் தனதாக்கினார்.

தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றிருந்த தி.மு.க வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 3,28,095 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்தார். பா.ம.க-வின் வடிவேல் ராவணன் 43,506 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் செந்தில் பாண்டியன் 23,967 வாக்குகளையும் பெற்று படுதோல்வியைச் சந்தித்தனர்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 77.64% வாக்குகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பதிவாகின.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...