முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளி கழிவறையை தூய்மை செய்யும் தலைமையாசிரியர்..!

பள்ளி கழிவறையை தூய்மை செய்யும் தலைமையாசிரியர்..!

தூய்மை பணியாளர்கள் இல்லாததால் அரசுப்பள்ளி தலைமையாசிரியே கழிவறையை சுத்தம் செய்து வருகிறார்.

தூய்மை பணியாளர்கள் இல்லாததால் அரசுப்பள்ளி தலைமையாசிரியே கழிவறையை சுத்தம் செய்து வருகிறார்.

தூய்மை பணியாளர்கள் இல்லாததால் அரசுப்பள்ளி தலைமையாசிரியே கழிவறையை சுத்தம் செய்து வருகிறார்.

 • 1-MIN READ
 • Last Updated :

  நாகையில் ஆதி திராவிடர் நலபள்ளியில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால் கழிவறையை தலைமையாசிரியரே தூய்மை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

  நாகப்பட்டினம் அடுத்துள்ள பாலையூர் ஒன்றியம் அழிஞ்சமங்கலம் பகுதியில் நூற்றாண்டுகள் கடந்த ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அரசின் வழிக்காடுதலின்படி தற்போது பள்ளிகள் இயங்குகிறது. அழிஞ்சமங்கலம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் வீரப்பன்.

  Also Read:  பெருங்களத்தூரில் கோர விபத்து.. பொறியியல் பட்டதாரிகள் 5 பேர் உயிரிழப்பு

  பள்ளியில் சுகாதார பணியாளர்கள் இல்லாத காரணத்தால் அப்பள்ளியின் கழிவறையை தலைமை ஆசிரியரே தூய்மை செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளது. தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் வீரப்பன் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து தினமும் பள்ளியின் கழிவறையை தானே தூய்மை செய்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காலையில் தினமும் பள்ளிக்கு சீக்கிரமே வரும் தலைமையாசிரியர் வீரப்பன் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை தானே ப்ளீசிங் பவுடர் தெளித்து தூய்மை செய்கிறார். பள்ளி கழிவறைகளை தலைமையாசிரியர் தூய்மை செய்யும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்த  மாணவர்கள் சமூக வலைதளங்களில் உலாவவிட்டு வருகின்றனர்.

  Also Read:  காதலியின் நிர்வாணப்படத்தை மணமகனுக்கு அனுப்பிய காதலன் - இன்ஸ்டாகிராம் காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

  தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால் இதுபோன்ற நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ் (நாகை)

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  First published: