இந்து கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் - அர்ஜுன் சம்பத்

இந்து கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் - அர்ஜுன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

மதசார்பற்ற அரசு இந்து கோவில் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மதசார்பற்ற அரசு இந்து கோவில் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

  இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் கோவிலுக்கு வந்து சுவாமி வழிபாடு நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவே போராட வேண்டியுள்ளது.

  கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு சிறப்பாக குடமுழுக்கு நடத்தலாம். ஆனால், சிலர் இதனை தடுக்க நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் மதசார்பற்ற அரசுகள் இந்து கோவில் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும். நமது கோவில்களை அறங்காவலர் குழு அமைத்து இந்துக்களே நடத்த வேண்டும் என்றார்.

  செய்தியாளர் - பிரசன்ன வெங்கடேசன்
  Published by:Esakki Raja
  First published: