வங்கக் கடலில் நாகை மீனவர்களைத் தாக்கியது கடற்கொள்ளையர்களா?

வங்கக் கடலில் நாகை மீனவர்களைத் தாக்கியது கடற்கொள்ளையர்களா?
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 29, 2018, 7:58 AM IST
  • Share this:
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்துச்சென்றனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் கடற்கொள்ளையர்களாக இருக்கலாம் என கரை திரும்பிய மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு சிறிய படகில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராஜேந்திரன், பாரதிதாசன் ஆகியோருக்குச் செந்தமான படகில் சென்றவர்களை கத்தி, அரிவாளால் தாக்கிய அந்த கும்பல் மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்றுள்ளது.

காயங்களுடன் கரை திரும்பிய மீனவர்கள், மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்றதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிங்கள மொழியில் பேசியதாகவும், கடற்கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும் மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர்.


ஏற்கெனவே இலங்கை கடற்படையின் கெடுபிடியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கடற்கொள்ளையர்களின் தாக்குதல் தொடர்வதால் மீன்பிடி தொழிலே அழியும் நிலை உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
First published: September 29, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்