ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கள்ளக்காதலில் மனைவி... சாம்பாரில் விஷம் கலந்து திமுக பிரமுகர் கொலை

கள்ளக்காதலில் மனைவி... சாம்பாரில் விஷம் கலந்து திமுக பிரமுகர் கொலை

கள்ளக்காதலில் மனைவி... சாம்பாரில் விஷம் கலந்து திமுக பிரமுகர் கொலை

நாகை அருகே வேலைக்காரனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்காக கணவனை விஷம் வைத்து மனைவி கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் 46 வயதான தேவேந்திரன். திமுக கிளை செயலாளரான இவர் மனைவி சூர்யாவுடன் வசித்து வந்தநிலையில், இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

  திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தேவேந்திரன் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். உடல்நிலை தேறி இருந்த தேவேந்திரன் ஜனவரி 4ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர். திருச்சி காவேரி மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில், 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

  இதனால் சோகம் அடைந்த அவருடைய உறவினர்கள் தேவேந்திரன் சடலத்தை வேட்டைக்காரனிருப்பு கொண்டுவந்து அங்குள்ள மயானத்தில் எரித்து இறுதிச்சடங்கு செய்தனர்.

  தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு

  இந்நிலையில், தேவேந்திரன் உயிரிழந்து 15 நாட்கள் ஆன நிலையில் அவருடைய மனைவி சூர்யா எந்த கவலையும் இல்லாமல் செல்போனில் தனியாக சிரித்து பேசுவதை அவருடைய உறவினர் சதீஷ்கண்ணா பார்த்து சந்தேகமடைந்து உள்ளார்.

  சூர்யாவின் செல்போனை ரகசியமாக பரிசோதித்த சதீஷ் கண்ணா, அவருடைய வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடன் சூர்யா அதிகம் பேசிக்கொண்டு இருந்ததை கண்டறிந்தார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், 32 வயதான சந்திரசேகரனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

  அவரிடம் வேட்டைகாரணிருப்பு போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யாவுக்கும், சந்திரசேகரனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. கல்லீரல் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த தேவேந்திரனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி சூர்யாவும், சந்திரசேகரனும் சாம்பாரில் எலி மருந்தை கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டனர்.

  சந்திரசேகரை கைது செய்த போலீஸார், கணவரை கொலை செய்த சூர்யாவையும் கைது செய்தனர். வேலைக்காரனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்காக கணவனையே விஷம் வைத்து மனைவி கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Nagapattinam